தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் கேப்ரில்லா. மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் கலந்துகொண்டு இருக்கிறார். இந்நிலையில் இவர் “என் 4” எனும் பெயரில் தயாராகும் படத்தின் வாயிலாக கதாநாயகி ஆகியுள்ளார். இதே திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக தொலைக்காட்சி நடிகை வினுஷா நடிக்கிறார்.

கேப்ரில்லா முன்பே நயன்தாரா நடிப்பில் வந்த “ஐரா” படத்தில் சிறுவயது நயன்தாராவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 2 டி.வி நடிகைகள் கதாநாயகியாக நடிப்பது “என் 4” திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தை லோகேஷ் குமார் டைரக்டு செய்கிறார். இதில் அபிஷேக், அப்சல், அக்ஷய், பிரயாகா, அனுபமா போன்றோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.