
துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர், மாலத்தீவில் 100% முஸ்லிம்கள். அங்கு ஏராளமான பாகிஸ்தானின் உடைய இன்புளுயன்ஸ்…. தீவிரவாதிகளின் இன்புளுயன்ஸ் என்று பெருகிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. நமக்கும் அவர்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. அதில் இருக்கிற நல்லவர்கள் பலர் நம்முடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.இந்த தேர்தலில் நமக்கு எதிரானவர்கள் வெற்றி பெற்றதனால், இந்த மாதிரி ஒரு நிலை. இந்த நிலை நீடிக்காது.
ஆனால் இதை சீனாவும், பாகிஸ்தானும் அவர்களின் நலனுக்காக பயன்படுத்திக் கொள்வதால், இன்றைக்கு ஒரு பெரிய பிளவு ஏற்பட்டிருக்கிறது. இது நீடிக்காது. என்பதுதான் எனக்கு தெரிந்தவரை இது நீடிக்காது என்று தான் தோன்றுகிறது. பொது சிவில் சட்டம் என்பது ரொம்ப நாளாக பேசிக்கொண்டு இருக்கின்றோம். இந்த நாட்டுக்கு பொது சிவில் சட்டம் என்பது எல்லோரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது பொது சிவில் சட்டம் அல்ல. எல்லோருக்கும் சில அம்சங்கள் பொதுவாக இருக்க வேண்டும். ஏனென்றால்,
பிரச்சினைகளை வாழ்க்கையில் பாருங்கள் விவாகம் என்பது எல்லாம் மதத்திலும்…. எல்லா சமுதாயத்திற்கும்…. எல்லோருக்குமே முக்கியமானது. இரண்டாவது விவாகரத்து வருகின்றது. குழந்தை பிறக்கின்றார்கள் அதில் பிரச்சனை வருகிறது. குடும்ப பிரச்சினை எல்லாம்… எல்லா மதத்திற்கும், எல்லா சமுதாயத்திற்கும், எல்லா இனத்திற்கும் பொதுவானது என்பதால் பொது சிவில் சட்டம் தேவை. அது அந்த மதத்தினுடைய நம்பிக்கைகளோ, அந்த மதத்தின் கோட்பாடுகளுக்கோ எதிராக இருக்கப் போவதில்லை.
ஆனால் இப்போது அதற்க்கு என்ன தோற்றம் கொடுக்கப்படுகிறது என்றால், இந்த பொதுவான விஷயங்களில் கூட அந்த மதத்தினுடைய கோட்பாடுகள் தான் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு…. 4 பேரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அது ஒரு கோட்பாடு இல்லை. அந்த காலத்தில்…. அரேபியாவில்…. அந்த மாதிரி ஒரு நிலைமை இருந்தது. அதற்காக அங்கிருந்ததை இங்கே வந்து மதத்தினுடைய உரிமை என்றும், அந்த மதத்தின் நம்பிக்கை என்று ஆகிவிட்டார்கள்.
இந்த மாதிரி பிரச்சினைகள் அரசியல் மூலமாக….. அரசியல் கட்சிகள் மூலமாக….. வாக்கு வங்கி மூலமா…… நம்ம அரசியல் சாசனத்தில் இந்த பொது சிவில் சட்டம் வரவேண்டும் என்று கூறியும், இவ்வளவு நாள் வராமல் இருப்பதற்கு காரணமே அரசியல் தான். சுப்ரீம் கோர்ட் பொது சிவில் சட்டம் வரவேண்டும், வர வேண்டும் என்று கூறியதனால் இந்த பொது சிவில் சட்டம் வரப்போவதில்லை. மக்கள் மனதை மாற்றியாக வேண்டும். இது வரவேண்டியதற்கு எல்லா தயாரிப்புகளையும் பாஜக செய்தாலும் கூட…. இதற்கு எப்படி இருந்தாலும் மக்களினுடைய ஒத்துழைப்பு தேவை என்பதால் தான் அதை விவாதிக்கின்றார்கள்.இந்து மதம் ஒன்றுதான் உலகமே ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தது என பேசினார்.