திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.