பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்கிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாகாணம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் இறுதியில் இருந்து சுமார் 234 பேர் இறந்துள்ளதாக பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
அதேபோன்று செனாப், சிந்து மற்றும் ஜெலூம் ஆகிய நதி களின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் முசாஃபர் நகர், டேரா காசி கான், ரஹிம் யர் கான், ஜாங் மற்றும் நான் சாஹிப் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைதுள்ளனர். இத்துடன் கனமழையால் பாகிஸ்தானின் பெரும்பாலான ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் கைபர் பக்துன்குவா, கில்கிட் பல்டிஸ்தான் ஆகிய மாகாணங்களிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
