அமெரிக்காவைச் சேர்ந்த அவசர சிகிச்சை மருத்துவர் டாக்டர் சாம் காலி, சமீபத்தில் X சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு எக்ஸ்ரே படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், ஒரு பெண்ணின் வயிற்றுப் பகுதியில் சுண்ணாம்பு படிந்த ஒரு கரு (குழந்தை உருவம்) இருந்தது. இது ‘லித்தோபீடியன்’ அல்லது பொதுவாக சொல்லப்படும் ‘கல் குழந்தை’ எனப்படும் மருத்துவ ரீதியாக மிக அரிதான ஒரு நிலையைச் சொல்கிறது. இந்த புகைப்படம் 4.88 லட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது.
லித்தோபீடியன் என்பது கருப்பைக்குள் இல்லை எனும் ‘எக்டோபிக் கர்ப்பம்’ ஏற்பட்ட பிறகு, அந்த கரு வளர்ச்சி நிறைவடைந்து இறந்துவிடும். பின்னர் தாயின் உடல் அந்த கருவை சுண்ணாம்பால் மூடி அதனை “கல்” போன்று உறைந்த நிலையாக்கிவிடுகிறது. இதன் மூலம் உடலுக்கு தொற்றுநோய் வராமலிருக்கும். இந்த நிலை பொதுவாக அறிகுறியின்றி பல ஆண்டுகள் தொடர்ந்து, சோதனைகளின் போது மட்டுமே தெரியவரும் என மருத்துவர் விளக்கியுள்ளார்.
Here’s one of the craziest X-Rays I’ve ever seen
What’s the diagnosis? pic.twitter.com/ojuOUNjD0k
— Sam Ghali, M.D. (@EM_RESUS) July 15, 2025
“>
இத்தகைய ‘கல் குழந்தை’ சம்பவங்கள் உலகளவில் மிகக் குறைவாகவே பதிவாகின்றன. சில நேரங்களில், 30–40 ஆண்டுகள் கடந்த பிறகு தான் இதுபோன்ற அறுவை சிகிச்சை அல்லது எக்ஸ்ரே மூலம் இது தெரியவரும். டாக்டர் காலியின் இந்த பகிர்வு மருத்துவ உலகில் பரபரப்பையும், பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மனித உடலின் வியத்தகு இயல்புகளை மீண்டும் ஒரு முறை இந்த சம்பவம் நிரூபித்திருக்கிறது.
