ரஷ்யாவின் ஆமூர் பகுதியில் 50 பேருடன் சென்ற விமானம் திடீரென மாயமாகியதாக தகவல் வெளியானது. AN- 24 பயணிகள் விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையம் அருகே சென்ற போது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த தொடர்பை மீட்க கட்டுப்பாட்டு அறை முயற்சி செய்து வந்த நிலையில் டிண்டா சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சீன எல்லையோரம் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.