விலங்குகளின் செயலில் இருந்து மனிதர்கள் கூட கற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியிருக்கும் விதமாக, ஒரு குட்டி யானையின் செயல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பொதுவெளியில் உள்ள குப்பையை எடுத்து நேராக குப்பைத் தொட்டியில் போடும் அந்த குட்டி யானையின் வீடியோ, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த காட்சியில், தனது குழந்தை யானையின் இந்த பொறுப்பான செயலுக்கு அருகில் இருந்த தாய் யானை பாராட்டு அளிப்பது கூட காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “விலங்குகள் கூட விழிப்புணர்வுடன் நடக்கும்போது, மனிதர்கள் என்ன செய்கிறார்கள்?” என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், “சமத்துடா செல்லம் நீ… நம்மளும் கட்டாயம் செய்யனும்” எனப் பாராட்டும் பின்னூட்டங்கள் அதிகமாகப் பதிவாகி வருகின்றன. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, கவனத்தை பெற்றுவருகிறது.

“>

 

சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது அனைவரதும் பொறுப்பு என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த குட்டி யானையின் செயல் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான இயற்கைச் சம்பவங்கள் மனித சமுதாயத்திற்கும், மாணவர்களுக்கும் சிந்தனைத் தூண்டும் விதம் ஊக்கம் அளிக்கின்றன.