
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் வெயில் சுட்டரித்து மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று முன்தினம் பி.பி அக்ரஹாரம் பகுதியில் இருக்கும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்குள்ள தரைமட்ட பாலம் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் பி.பி அக்ரஹாரம் மல்லி நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் பாத்திரம் மூலம் தண்ணீரை இரைத்து வெளியே ஊற்றினார்கள். இரவு முழுவதும் வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.