உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் (Tashkent) நடந்த ஒரு பங்கீ ஜம்பிங் (Bungee Jumping) சாகசத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி, பல சாகசப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், உயரத்திலிருந்து குதித்த இளம் பெண் ஒருவர் காற்றிலேயே மாரடைப்பு வந்து இறந்துவிட்டதாகவும், அவரது “கடைசி அலறல்” மட்டுமே பதிவானதாகவும் சமூக ஊடகங்களில் ஒரு தவறான செய்தி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணின் பெயர் யெசேனியா (Yesenia), இவர் ஒரு உக்ரேனிய வோல்கர் (Vlogger) ஆவார். அவர் தனது யூடியூப் சேனலில் (YouTube Channel) வெளியிட்ட முழு வீடியோவில், அவர் பயத்தின் காரணமாக மாரடைப்பு வந்து இறக்கவில்லை, மாறாக, அவர் சாகசத்தின் தீவிரத்தால் மயக்கமடைந்தார் (fainted) என்று விளக்கமளித்துள்ளார்.
கீழே இறக்கப்பட்டு, அவர் நண்பர்கள் அவரிடம் பேசியபோது, அவர் திடீரென சுயநினைவு பெற்று, மீண்டும் உற்சாகமாகிவிட்டார். இருப்பினும், இந்த முழு வீடியோவை மறைத்து, அவர் இறந்துவிட்டதாகக் கூறி சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். அந்தப் பெண் தற்போது முழுப் பாதுகாப்பாக உள்ளார்.
