பொதுவாகவே, பிணவறை (Mortuary) ஊழியர்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. தினமும் மரணத்துடன் போராடும் அவர்களுக்கு ஒரு திகிலூட்டும் சம்பவம் நடக்கும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிணவறை ஒன்றில் ஒரு பெண் ஊழியர் சடலம் அருகே நின்று சில குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். அந்தச் சடலம் பாதியளவு குளிர்சாதனப் பெட்டிக்குள் (Freezer) வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ஒரு நொடியில் அந்தச் சடலத்தின் கால்கள் அசைந்துள்ளன.
இதைக் கவனித்த அந்தப் பெண் ஊழியர் அது தனது கண்களின் பிரமை என்று நினைத்துவிட்டார். ஆனால், இந்தக் காட்சி பிணவறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Just a normal day at work for morticianspic.twitter.com/j38GNW0QRY
— Community Notes & Violations (@CNviolations) November 19, 2025
“>
இந்த 15 வினாடி விடியோ சமூக வலைதளங்களில் வெளியானவுடன், இது அமானுஷ்ய நிகழ்வு என்று பலரும் கமென்ட் செய்தனர். ஆனால், சில விஞ்ஞானபூர்வ கருத்துக்கள் இதற்கு விளக்கம் அளித்துள்ளன. அதாவது, மனிதன் இறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகும் உடலின் சில உறுப்புகள் சுருங்கும் அல்லது தளர்வடையும்போது, கால், கை அல்லது கண் இமைகள் அசைய வாய்ப்புள்ளது.
எனினும், சில உண்மைச் சரிபார்ப்பு தளங்கள் (Fact-check Sites) இந்த விடியோவில் சடலத்தின் காலில் ஒரு குறிப்பிட்ட குறியீடு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து, இது AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளன.
இந்தச் சலசலப்புகளுக்கு மத்தியிலும், இந்த விடியோ பார்ப்பவர்களைப் பயத்தில் உறைய வைப்பதில் வெற்றி கண்டுள்ளது.
