டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) பிரதமர் சௌத்ரி அன்வருல் ஹக் தெரிவித்துள்ள கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து அவர் பேசியபோது, “தனிநாடு கேட்கும் பலுசிஸ்தானை இந்தியா தூண்டிவிட்டால், செங்கோட்டை முதல் காஷ்மீர் வரை தாக்குவோம் என நாங்கள் முன் சொன்னோம். இப்போது, அல்லாவின் அருளால், எங்களுடைய தீரம் மிக்க வீரர்கள் அதைச் செய்துள்ளார்கள்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் உயர்மட்ட அரசியல் தலைவர், இந்தியாவின் தலைநகரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குத் தனது நாடே பொறுப்பு என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருப்பது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச அரங்கில் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.