
பிரபல அரசியல் வியூக வகுப்பாளராக இருந்து தற்போது ‘ஜன் சூரஜ்’ இயக்கத்தின் மூலமாக பீகாரில் அரசியலில் நுழைந்துள்ள பிரசாந்த் கிஷோர், இன்று ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது அரசியல் பயணமும், அரசியல் நிலைப்பாடுகளையும் மிகத் திறமையாக பகிர்ந்தார்.
இந்நிகழ்ச்சியில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தன்னை ஒப்பிடுவது குறித்து ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், “கெஜ்ரிவால் மாதிரி வினாத்தாள்களை மட்டும் படிக்கும் தலைவர்… நாங்கள் பாடப்புத்தகங்களைப் படிக்கும் தலைவர்கள். பாடப்புத்தகம் படிக்கும் மாணவரும் யூகத் தாள் படிக்கும் மாணவரும் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதை நல்ல மாணவர்கள் நன்றாக அறிவார்கள்,” என சுவாரஸ்யமாக பதிலளித்தார்.
அதோடு, “கல்வியைப் பொருத்தவரை கெஜ்ரிவாலுக்கு சில தவறுகள் இருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளில் டெல்லி கல்வித்துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் பாராட்டத்தக்கது. பீகாரை விட, டெல்லியின் கல்வி 200 மடங்கு மேம்பட்டுள்ளது,” எனவும் விளக்கினார்.