தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு மின்னலே என்ற படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழி படங்களிலும் இசையமைத்திருக்கின்றார். இவர் சமீபத்தில் நடத்திய இசைக் கச்சேரி மக்களிடையே நன்கு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
22 வருடங்கள் சினிமா துறையில் இசையமைப்பாளராக கலக்கி வந்தாலும் இதுவரை ஒரு பாடல் கூட ஹாரிஷ் ஜெயராஜ் பாடவில்லை. இது குறித்து ஒரு பேட்டியில் பேசும்போது ஒரு உண்மையான பாடகர் எப்படி அருமையாக பாடுகிறாரோ அப்படி என்னால் பாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தால் நான்தான் பாடுவேன் என கூறியுள்ளார்.
