தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு சூரறைப் போற்று திரைப்படத்திற்காக கடந்த வருடம் தேசிய விருது கிடைத்தது. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரலாற்று பாணியில் 10 மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், படத்தின்  ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளிவந்துள்ளது.

அதன்படி நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு 186 கோடி என்று கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு 20 முதல் 25 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். ஆண்டு வருமானம் 30 கோடியாக இருக்கிறது. நடிகர் சூர்யாவுக்கு சென்னையில் உள்ள தியாகராய நகரில் பிரம்மாண்டமான வீடு இருக்கிறது. இதேபோன்று வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் வீடு இருக்கிறது. மேலும் நடிகர் சூர்யாவிடம் 1.38 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 730ld, 1.10 கோடி மதிப்புள்ள Jaguar XJL, 80 லட்சம் மதிப்புள்ள Audi Q7, ரூ. 60 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் போன்றவைகள் இருக்கிறது.