மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு வந்தார். அதன் பிறகு கடந்த மாதம் வெளியான துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இந்த படத்தின் சூட்டிங் வட மாநிலங்களில் நடைபெற்ற போது ஓய்வு நேரத்தில் அஜித் பைக் ரைடுக்கு சென்று விட்டார். அவருடன் சேர்ந்து நடிகை மஞ்சுவாரியரும் பைக் ரைடுக்கு சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வெளியானது.

இந்நிலையில் நடிகர் அஜித் ஒரு சிறந்த ரைடர் என்றும் அவரைப் போன்று தானும் ஒரு ரைடர் ஆக வேண்டும் என விருப்பப்படுவதாகவும் நடிகை மஞ்சு வாரியர் கூறியுள்ளார். அண்மையில் ஓட்டுநர் உரிமம் பெற்ற நடிகை மஞ்சு வாரியர் தற்போது 22 லட்சம் மதிப்புள்ள சொகுசு பைக் ஒன்றினை சொந்தமாக வாங்கியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை நடிகை மஞ்சு வாரியர் தன் வலைதள பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதற்காக அஜித் சாருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்