இந்தியாவில் செயல்படும் தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி தற்போது பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி 2 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தின் படி பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.35% வரை வட்டி வழங்கப்படும்.

அதன் பிறகு 35 முதல் 75 நாட்களுக்கு 5.5%, 46 முதல் 60 நாட்களுக்கு 6%, 61 நாட்கள் முதல் 3 மாதம் வரை 6.25%, 3 முதல் 6 மாதம் வரை 6.85%, 6 மாதம் முதல் 9 மாதம் வரை 7%, 9 மாதம் முதல் ஒரு வருடம் வரை 7.15%, 1 வருடம் முதல் 2 வருடம் வரை 7.35%, 2 வருடம் 30 மாதம் வரை 7.30%, 30 மாதம் முதல் 3 வருடம் வரை 7.30%, 3 முதல் 5 வருடம் வரை 7.25%, 5 ஆண்டு முதல் 10 வருடம் வரை 7.25% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.