பிரதமர் மோடியின் காப்பீடு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி செயலாளர் விவேக் ஜோசி தலைமையில் கடந்த 10-ம் தேதி நிதி அமைச்சகத்தின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் போன்றவைகள் குறித்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரதமரின் காப்பீடு திட்டங்கள் தொடர்பாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். மேலும் 3 மாத காலங்களுக்கு கண்டிப்பாக பிரதமரின் காப்பீடு திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.