தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் ஜனவரி 6-ம் தேதிக்குள் ரேஷன் கடைகள் மூலம் தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வேட்டி மற்றும் சேலைகள் விநியோகம் செய்யப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்த இலவச வேட்டி, சேலை விநியோகத்தைத் தொடர்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தேவையான பச்சரிசி, சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணமும் வழங்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் சில நாட்களில் தெரியவரும். தமிழக முதலமைச்சர் இதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டதும் முறைப்படி அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
