இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்காவில் பணிபுரிய வேண்டும் என்பது கனவாக உள்ளது. அப்படி தங்களுடைய கனவை நனவாக்கி பெரும்பாலானோர் அங்கே பல துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தியை கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை. பல வெளிநாட்டு பணியாளர்கள் தங்கள் H-1B விசாவை (பணி விசா) புதுப்பிக்க இனி அமெரிக்காவிலேயே விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னோடித் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களே