கிராமி விருதுகளை வென்ற பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கெஜ், தனது பெங்களூரு வீட்டில் ஸொமேட்டோ உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ‘சம்ப் கவரை’  திருடிச் சென்றதாகச் சனிக்கிழமை அன்று சமூக ஊடகங்களில் புகார் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் டிசம்பர் 11ஆம் தேதி காலை சுமார் 6 மணி அளவில் நடந்ததாகவும், திருடிய நபர் அதற்குப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே அந்தப் பகுதியை நோட்டமிட்டுச் சென்றுள்ளார் என்றும் ரிக்கி கெஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ricky Kej (@rickykej)

இந்தத் திருட்டுச் சம்பவம் தனது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்றும், அதில் இரண்டு கோணங்களில் இருந்து அந்த நபரின் முகத்தையும் அவர் பயன்படுத்திய சிவப்பு நிற ஹோண்டா ஆக்டிவா வாகனத்தின் பதிவெண்ணையும் (KA03HY8751) தெளிவாகக் காண முடிவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியுடன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ஸொமேட்டோ நிறுவனம் மற்றும் பெங்களூரு காவல்துறையினரின் உதவியை நாடியுள்ள ரிக்கி கெஜ், ‘இதுபோல் உங்களுக்கும் நடக்கலாம், எனவே விழிப்புடன் இருங்கள்’ என்றும் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

ரிக்கி கெஜ்ஜின் இந்தக் குற்றச்சாட்டிற்கு ஸொமேட்டோ நிறுவனம் உடனடியாகப் பதிலளித்ததுடன், இது குறித்து விசாரணை மேற்கொண்டு அந்த ஊழியர் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.