இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். அதற்காக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கூகுள் பே செயலியை பயன்படுத்தும் போது ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

கூகுள் பே செயலியில் பணப்பரிவினை செய்யும் போது ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பயன்படுத்துவதால் அதை வங்கி தகவல்களை எடுத்துக் கொள்ளும் என்று எச்சரித்துள்ளது. எனவே இனி பரிவர்த்தனை செய்யும் போது anydisk, TeamViewer போன்ற செயலிகள் பயன்பாட்டில் இல்லாததை உறுதி செய்யும்படி பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.