இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தி வரும் நிலையில் அதிகமானோர் வாட்ஸ் அப் மற்றும் சிக்னல் போன்ற குறுந்தகவல் செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த செயலிகளுக்கு போட்டியாக கூகுள் மெசேஜஸ் ஆப் செயலியில் புதிய வசதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மெசேஜஸ் செயலியில் ஆர்சிஎஸ் என்ற ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் வசதி தற்போது அறிமுகம் ஆகியுள்ளது.

இந்த வசதி வாட்ஸ் அப் மற்றும் சிக்னல் போன்ற செயல்களுக்கு போட்டியாக உள்ள நிலையில் மெசேஜஸ் செயலில் எமோஜி ரியாக்சன் அம்சம் மற்றும் youtube வீடியோக்களை இந்த செய்தியில் இருந்தபடி பார்க்கும் வசதி ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த செயலியில் வாய்ஸ் நோட்ஸ் அம்சம் மூலமாக பயணங்கள் சிறிய வாய்ஸ் நோட்ஸ் செய்து அதனை மெசேஜஸ் ஆப் மூலமாக மற்றவர்களுக்கு அனுப்பலாம்.