ஆளுநர் அறிக்கையை சமாதானமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழகம் என்று சர்ச்சையை ஏற்படுத்திய ஆளுநர், இன்று இது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி அந்த அறிக்கையிலும் அந்த காலத்தில் தமிழ்நாடு என்று இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இது ஒரு புது சர்ச்சையாக உள்ளது என்று கூறியுள்ளார். மொத்தத்தில் ஆளுநர் வெளியிட்ட அறிக்கை சமாதானம் இல்லை என தெரிவித்துள்ளவர் பிடிவாதம் என்று கூறியுள்ளார். புது சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த அறிக்கை பெருமாள் போய் பெத்த பெருமாள் ஆன கதையாகி இருப்பதாக கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.