மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களை காட்டிலும் அரசு பழங்குடியின பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதாக பழங்குடியினர் நலத்துறைக்கு தரவுகள் கிடைத்துள்ளது.

இதையடுத்து பள்ளி தேர்வுகளில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துமாறு அரசு பழங்குடியின பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் எடுத்து சொல்லுமாறு தெரிவித்துள்ளது.