மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை.
மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே கார் சேவையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே திட்டத்தை செயல்படுத்துவதற்காக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான டெண்டரில் தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் வெளியிட்டது.
அதன்படி மெரினா கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் வரை ரோப்வே கார் சேவையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கடற்கரையொட்டி இந்த ரோப் கார் சேவையை அமல் செய்வதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.