அண்ணாமலை மீது பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார் காயத்ரி ரகுராம்.

பாஜகவில் எட்டு ஆண்டுகளாக உழைத்ததற்கு எந்த பையனும் இல்லை என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். கட்சியில் அனாதையாக விட்டதற்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவில் இருந்து விலகிய பின்னர் பேட்டியளித்த காயத்ரி ரகுராம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜகவில் ஆடியோ, வீடியோ பிரச்சனை உருவாக இருக்கின்றது என கூறினார்.

150 பேர் முன்னிலையில் எனது நற்பெயருக்கு கலங்கம் கற்பித்தார் அண்ணாமலை என்று அவர் குற்றம் சாட்டினார். பாஜக தன்னை அனாதையாக விட்டு விட்டார்கள் என்றும் இதற்கு அண்ணாமலையே முழு முதல் காரணம் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்தார். 8 ஆண்டுகளாக பாஜகவில் உழைத்ததற்கு எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது என்றும் காயத்ரி ரகுராம் கூறினார்.