நீங்கள் அனுப்ப விரும்பும் கோப்பு அல்லது வீடியோவை முதலில் Google டிரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜிமெயிலை அனுப்பும் போது, ​​திரையின் தோன்றும் டிரைவ் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ‘Insert from Drive’ ஆப்ஷனை கிளிக் செய்து, தோன்றும் ஆப்ஷன்களில் ‘My Drive’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அதன் பிறகு, இணைக்கப்பட வேண்டிய பெரிய கோப்பைத் தேர்ந்தெடுத்து, ‘Insert’ என்பதைக் கிளிக் செய்யவும். கூகுள் அந்த கோப்பிற்கான இணைப்பை(Link) உருவாக்கி அதை தானாகவே மின்னஞ்சலுக்கு அனுப்பும். இவ்வாறு பெரிய கோப்புகளை மெயில் வழியாக நம்மால் அனுப்ப இயலும்.