வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருக்கும் சிலருடைய ப்ரோபைல் பிக்சரை சில நேரங்களில் பார்க்க முடியாமல் போகலாம் ஏன் அவ்வாறு ஆகிறது? எந்த காரணத்தால் DP  பார்க்க முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . அதாவது குறிப்பிட்ட நபர் அவருடைய DPயை யாரும் பார்க்க முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கலாம். உங்களுடைய செல்போனில் அவருடைய செல்போன் எண்  சேமித்து வைக்கப்படவில்லை என்றாலும் ப்ரொபைல் பிச்சர் பார்க்க முடியாது.

ப்ரோபைல் பிச்சர் நீங்கள் முன்பு பார்க்க முடிந்தாலும் உங்களுடைய எண்ணை நீக்கிய பிறகு பார்க்க முடியாமல் போய்விடும். மேலும் அந்த நபர் தன்னுடைய ப்ரொபைல் பிக்சரை நீங்கள் மட்டும் பார்க்க முடியாதபடி மறைத்து வைத்திருக்கலாம். ஒருவேளை உங்களுடைய எண்ணை அந்த நபர் பிளாக் செய்து வைத்திருந்தால் ப்ரோபைல் பிச்சர் தெரியாமல் இருக்கும். ப்ரொபைல் பிச்சர் இல்லாமல் இருக்கலாம் என்று நினைத்து இருக்கலாம் .அதாவது செட்டிங்ஸில் எந்த நிபந்தனையும் இருக்காது. ஒருவருடைய ப்ரோபைல் படத்தை பார்க்க முடியவில்லை என்றால் அவர் தன்னுடைய கணக்கு முழுவதுமாக டிஆக்டிவேட் செய்திருக்கலாம்.