காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவாக தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் அடுத்து வரும் 15 நாட்களுக்கு கர்நாடகா அரசு விடுவிக்க வேண்டும் என காவேரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்கள். ஏற்கனவே தமிழகத்துக்கு வர வேண்டிய நீரின்  அளவு முறையாக திறந்து விடவில்லை எனவும்,  உடனடியாக உச்சநீதிமன்றத்தினுடைய உத்தரவின் படி நீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்தது.

காவேரி ஒழுங்காற்று குழுவிடமும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திலும்  தமிழக அரசு சார்பாக மனுவாக கொடுக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக இன்றைய தினம் நடைபெற்ற  காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழக அரசு சார்பாக இன்று பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது.

காவிரியில்  நீரில் திறந்து விடாமல் இருப்பதன் காரணமாக தமிழகத்தினுடைய டெல்டா மாவட்டங்கள் எந்தளவு பாதிக்கபட்டு இருக்கின்றது. இதற்கு முன்பாக கர்நாடகா சார்பாக  தண்ணீர் திறந்து விடுவதற்கான மறுப்பை தெரிவித்ததன் காரணமாக தமிழகத்தினுடைய விவசாயிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயம் மிக அளவில் பாதிக்கப்படுகிறது போன்ற விவர  தரவுகளுடன் இன்றைய தினம் தமிழக அரசு  இந்த ஆணையதிடம் கோரிக்கை வைத்தது.

அதேபோல கர்நாடக சார்பாக எங்களின் குடிநீர் தேவைக்காக முன்னுரிமை அளிக்கப்படும். இதன் காரணமாக தங்களால் தமிழக அரசுக்கு நீரை கொடுக்க முடியாது போன்ற விஷயங்களை எல்லாம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த ஒரு கூட்டத்தில்,  அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி  நீரை  தமிழக அரசுக்கு திறக்க வேண்டும் என்ற உத்தரவை  பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.