மத்திய அரசனது குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கவும் ஏற்பாடு செய்து வரும் நிலை கடந்த மாதம் ஆகஸ்ட் நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட 43 லட்சம் குழந்தைகள் உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

‘போஷன் டிராக்கர்’ செயலியில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களில் இருந்து இது தெளிவாகிறது. கணக்கெடுக்கப்பட்ட மொத்த குழந்தைகளில் அவர்களில் 6 சதவீதம் பேர் உடல் பருமனாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 7,24,56,458 குழந்தைகள் தொடர்பாக இந்தக் கண்காணிப்பு நடத்தப்பட்டது.