தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடந்த காவேரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நிறைவடைந்து இருக்கிறது.  தமிழகத்திற்கு கர்நாடகம் 5,000 கன அடி நீரை திறக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தமிழகத்திற்கு கர்நாடகம் இதுவரை அளிக்கப்பட வேண்டிய 103.5 டிசிஎம்சியில் 38.4 டிஎம்சி மட்டுமே கிடைத்திருக்கிறது. 65.1 டிஎம்சி குறைவாக இருக்கிறது.  இந்நிலையில் இது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்ற நிலையில் தமிழகத்திற்கு 5000 கன அடி நீரை திறக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.