ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல் .1..!!

அறிவியல் ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல்.1 விண்கலம். ஆதித்யா எல்.1 விண்கலம்  அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்டெப்ஸ் கருவியின் சென்சார்கள் பூமியிலிருந்து 50,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதி வெப்ப ஆற்றலை அளவிடத் தொடங்கியது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 6 சென்சார்களை உள்ளடக்கிய ஸ்டெப்ஸ் கருவி வெவ்வேறு திசைகளில் கண்காணிக்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்.1 விண்கலத்தின் அறிவியல் ஆய்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ இந்த முடிவுகளின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Leave a Reply