தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று தன்னுடைய 71-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆளுநர் ரவியின்  பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என அன்புடன் வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.