மிதுன ராசி அன்பர்களே…!  இன்று உற்சாகமாக பணியை மேற்கொள்வீர்கள். காரியங்களை மிகவும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். தனக்கென்று தன்னிறைவு பெறும் நாளாக இருக்கக்கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாளாக இருக்கக்கூடும். பெருந்தன்மையுடன் செயல்பட்டு,  மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அவசர தேவைகள் ஓரளவு கண்டிப்பாக பூர்த்தி அடையும். மனம் இன்று கண்டிப்பாக நிம்மதி அடையும். உங்கள் நல்ல செயலை சிலர் பரிகாரம் சொல்வார்கள், சிலர் குறைகள் சொல்வார்கள். அதனை பெரிதுபடுத்த வேண்டாம்.

பயனறிந்து பேசுவதால் உரிய நன்மைகள் கிடைக்கும். தொழிலில்  நிலுவைப் பணியை நிறைவேற்றுவது நல்லது. சீரான அளவில் பண வரவு வந்து கொண்டிருக்கும்.  அதிகம் பயன் பெறாத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். திட்டம் திட்டி வெற்றி பெறுவது ரொம்ப நல்லது. குடும்ப உறவுகள் பலம் பெறகைகூடும். அனைவரையும் அனுசரித்து செல்லுங்கள்,  அது போதும்.

கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு,  சரியாக கூடும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். திடீர் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் மற்றவரிடம் கவனமாக பேசுவது  கண்டிப்பாக நல்லது. கருத்து வேற்றுமை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் அலைச்சல் கண்டிப்பாக குறையும். வாகனங்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். இருசக்கர வாகன செலவுகள் கொஞ்சம் இருக்கின்றது. நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள், உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள பாருங்கள். இன்று பெண்களுக்கு வேலை சுமை இருக்கும்.

செய்யும் இடங்களில் கவனம் வேண்டும். எந்த ஒரு பணியாக இருக்கட்டும்,  கவனமாக எதிர்கொள்ள பாருங்கள். குடும்பத்துடன் கோவில் குளங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. சில அதிர்ஷ்டகரமான நல்ல சூழல் இருக்கு. காதல் போன்ற விஷயங்களில் மிதுன ராசியினர்கள் நன்மை காப்பது நல்லது. காதலில் பொறுமை காப்பது நல்லது. கொஞ்சம் விட்டுக் கொடுப்பது மிக நல்லது. இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பங்கு கொள்வீர்கள்.

கல்வி மீது முழுமையான அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கண்டிப்பாக படியுங்கள்,  வெற்றி நிச்சயம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். காலையில் எழுந்ததும் கண்டிப்பாக அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு வாருங்கள், நல்ல முன்னேற்றம் ஏற்படப்படும்.

மிதுன ராசிக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு

மிதுன ராசிக்கான அதிஷ்ட எண்: 3 மற்றும் 9

மிதுன ராசிக்கான அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்