தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உதயநிதி பேச்சு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதில், பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியானது பிரதமரை நிலை தடுமாற வைத்துவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் என ஏதோ பூச்சாண்டி காட்டி வருகிறார்.  நாடாளுமன்ற தேர்தலை பார்த்து பயந்திருப்பது பாஜகவே தவிர இந்தியா கூட்டணி அல்ல. பாஜகவிற்கு இப்போது வந்திருப்பது சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல. இந்தியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்தி விட முடியாதா ? என்று அரசியல் கணக்கு.  இதை புரிந்து கொள்ள பெரிய அரசியல் வித்தகம் ஏதும் தேவையில்லை

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய தலைவர் மோகன் பகவத் அவர்களே சமூக அமைப்பில் சக மனிதர்களை பின்னுக்கு தள்ளி விட்டோம். நாம் அவர்களை பற்றி கவலைப்படவில்லை. அது 2000 ஆண்டுகளாக தொடர்ந்தது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும் வரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு தீர்வுகள் இருக்க வேண்டும் என்று பேசி இருக்கின்றார்.

எனவே இதற்கு மேலும் உதயநிதி பேசுவது தொடர்பாக பாஜகவினருக்கே விளக்கம் வேண்டும் என்றால் ? மோகன் பகவத் அவர்களை கேட்டு தெரிந்து கொள்ளட்டும். அது மட்டுமில்லாமல் சனாதனம் என்றால் என்ன ? தமிழ்நாட்டில் முன்னோடி திட்டங்கள் பல கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், எந்த தனி மனித உணர்வுக்கும் மதிப்பளித்து அவர்கள் சுயமரியாதை உள்ள மனிதர்களாக ஆக்கி வரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

இனம் – மொழி – சாதி வேறுபாடு இன்றி அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ அமைதி மிகு வாழ்க்கையை உறுதி செய்யும் இயக்கம் என்றும்,  அறிவு சார் பிரச்சாரம் செய்பவர்களே தவிர எந்த காலத்திலும் வன்முறையில் நம்பிக்கை இல்லா இயக்கம். அத்தகைய பலம்பெறும் பேரியக்கத்தின் மீது களங்கம் கற்பிக்கும் மூலமாக அரசியல் செய்ய நினைத்தால் அந்த புதைகுழி யில் பாஜக தான் மூழ்கும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையிலே அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.