தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என் ரவிக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எதிராக பிரச்சாரம் செய்து,  வெறுப்பு பேச்சை பேசி உள்ளார். செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்ற அனுமதித்தவர்களுக்கு நன்றி என உதயநிதி ஸ்டாலின்  சொல்லி உள்ளார்.

அதே நேரத்தில் அந்த மாநாட்டின் தலைப்பு மிகவும் பொருத்தமானதாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசியதாகவும் சொல்லியுள்ளார். இந்த மாநாட்டுக்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று இல்லாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று பெயர் சூட்டியது கரெக்ட்டு என்று பேசியதாக அண்ணாமலை அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார். சில விஷயங்களை எதிர்க்கக் கூடாது. கொசுக்களை போல் அவற்றை ஒழிக்க வேண்டும். டெங்கு, மலேரியா, கொரோனா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அன்று மேடையில் பேசிய அந்த விவகாரத்தை அண்ணாமலை தெளிவாக இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

முதலில் நாம் செய்ய வேண்டியது சனாதனத்தில் இருந்து விடுபடுவதுதான். சனாதனம்  என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து தான் வந்தது. சனாதனம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. சனாதனம் நிலையானது மற்றும் மாறாதது.  அதை யாரும் கேள்வி கேட்க முடியாது இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு முன்னால் திராவிட கழக தலைவர் கீ. வீரமணி அவர்கள் இந்து மதமும் சனாதன  தர்மமும் ஒன்று  என்று சொல்லி உள்ளார்.

சனாதன தர்மத்தை ஒழிக்க அமைச்சரின் அழைப்பு நாடு முழுவதும் உள்ள சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் வார்த்தையை இதுவரைக்கும் திரும்ப பெறவோ  அல்லது மன்னிப்பு கேட்கவோ இல்லை. பெரியாரின் வழியில் பேசுகிறேன் என்று அன்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஈ.வே.ராமசாமி அவர்கள் பேசிய பேச்சுக்கு  அன்னைக்கு ஜவஹர்லால் நேரு காமராஜர் கோடு கடிதம் எழுதிய ஒரு விசயத்தையும் அண்ணாமலை சுட்டிக்காட்டி உள்ளார்.

அப்போதைய பிரதமராக இருந்தபோது பண்டித ஜவஹர்லால் நேரு அப்போது பிரதமராக இருந்தபோது அப்போது சென்னை முதல்வர் காமராஜருக்கு 1957 நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். அந்த கடிதத்தை காட்டி விளக்கமாளிக்க விரும்புகிறேன் என்று அண்ணாமலை ஆளுநருக்கு கொடுத்த புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈ. வே ராமசாமி அவர்கள் நடத்தி வரக்கூடிய பிராமணருக்கு எதிரான பிரச்சாரத்தால்  நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். இதைப்பற்றி சில காலத்துக்கு முன்பு நான் உங்களுக்கு எழுதினேன். இந்த விஷயம் பரிசீலனையில் இருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. ராமசாமி நாயக்கர் நடந்து கொண்டிருப்பதை நான் கண்டிக்கிறேன். அதையே மீண்டும் சொல்லி,  சரியான நேரத்தில் மக்களை குத்திக் கொல்ல தொடங்குங்கள். அவர் சொல்வதை ஒரு குற்றவாளி அல்லது பைத்தியக்காரனால் மட்டுமே சொல்ல முடியும்.

அவரை என்னவென்று தீர்மானிக்கும் அளவுக்கு எனக்கு தெரியாது. ஆனால் ஒருவர் இந்த வகையில் பேசும் விஷயம் நாட்டில் உள்ள மக்களுக்கு பெரிய மனச்சோர்வை ஏற்படுத்தும் அப்படின்னு சொல்லிட்டு,  அன்றைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு காமராஜருக்கு ஒரு கடிதம் எழுதி சுட்டி காட்டியததை  தான் தற்போது அண்ணாமலை அவர்களும் ஆளுநருக்கு எழுதி இருக்க கூடிய கடிதத்தில் உதயநிதி ஸ்டாலின்  அவர்கள் பேசி இருக்கக்கூடிய வார்த்தைகள் எந்த மாதிரியான வார்த்தைகள் ? இதற்க்கு உண்டான விளக்கம் என்னவென்று கேட்க வேண்டுமென ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.