வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் இருக்கும் பத்தல பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரும் போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டி ஆந்திர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆந்திர மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரமாக மோதிய வாகனம்…. இறந்து கிடந்த பெண் சிறுத்தை…. வனத்துறையினர் விசாரணை…!!
Related Posts
“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”.. 15 நாட்கள் கடையை பார்த்துக்கோ… நம்பி சென்ற உரிமையாளர்… 250 சவரன் தங்க நகைகள் மாயம்… பரபரப்பு சம்பவம்..!!
அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை…
Read moreதெரு நாய்களின் அட்டகாசம்… 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியதால் பரபரப்பு… பீதியில் பொதுமக்கள்…!!
திருவள்ளூர் மாவட்டம் புங்கம்பேடு கிராமத்தில் சில நாட்களாக தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இரண்டே நாட்களில் பத்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியதால் அந்த கிராம மக்கள் பயத்தில் உள்ளனர். இந்த நிலையில் தெருநாயால்…
Read more