காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி மணிமேகலை தெருவில் வினித், கன்னியப்பன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அன்று இவர்கள் வீட்டிற்கு அருகே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் வினித்தை தாக்க முயன்றனர். இதனை பார்த்த கன்னியப்பன் அவர்களை தடுக்க முயன்றார். மேலும் எதிர் கோஸ்டினர் கொண்டு வந்த ஒரு கத்தியை பறித்து அவர்களை சரமாரியாக வெட்டினார். இதனால் தலை மற்றும் கழுத்தில் வெட்டு காயங்களுடன் எதிர் தரப்பைச் சேர்ந்த ஒரு வாலிபர் கீழே விழுந்தார்.

உடனடியாக தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தம்பி சென்றனர். இதற்கு இடையே படுகாயம் அடைந்த அந்த வாலிபர் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த கோபால கண்ணன் என்பது தெரியவந்தது. இந்த மோதலில் கன்னியப்பனுக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.