விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன மங்கலம் கிராமத்தில் ஸ்வீட் மாஸ்டரான அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 30-ஆம் தேதி வேலைக்கு சென்ற அருண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அருணின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். கடந்த 30-ஆம் தேதி அருணின் தந்தை மோசஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அருணை தேடி வந்தனர். இந்நிலையில் திண்டிவனம் அருகே இருக்கும் விழுக்கம் ஏரிக்கரை வேப்பமரத்தில் அழுகிய நிலையில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் அருண் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? முன் விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.