தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதிய நகரம் கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவர் மான்களை வேட்டையாடுவதற்கு வலைகளை கட்டி வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் வனத்துறையினர் இளவரசனை பிடித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவின்படி வனத்துறையினர் இளவரசனுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மானை வேட்டையாட முயன்ற நபர்…. ரூ.35 ஆயிரம் அபராதம்…. வனத்துறையினர் நடவடிக்கை…!!
Related Posts
“வடிகால் அடைப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!” நேரில் களமிறங்கிய எம்.எல்.ஏ. ரேவந்த சரண்.. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு..!!”
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயப்பாக்கம் பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாகச் செயல்படவில்லை என்று பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக வந்த புகார்களைத் தொடர்ந்து, தொகுதி எம்.எல்.ஏ. ரேவந்த சரண் அப்பகுதிக்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் நீண்டகாலமாகத் தொடரும் வடிகால்…
Read more“ஆபீஸ் ஏசியில உட்கார்ந்து ஆர்டர் போடுற ஆள் நான் இல்ல” போராட்டக் களத்திற்கே நேரில் வந்த தவெக அமைச்சர்…. வைரலாகும் வீடியோ….!!
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பொதுமக்களின் அவசரத் கோரிக்கையை ஏற்று தனது பயணத்தின் பாதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட சம்பவம்…
Read more