இந்திய தேர்தல் ஆணையத்தால் 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் ஒரு அடையாள அட்டை வாக்காளர் அட்டையாகும். தேர்தல்களில் வாக்களிப்பதற்கு அரசு வாக்களிப்பவரின் அடையாளங்களை பெறுவதற்கு ஒரு ஆவணமாக வாக்காளர் அட்டையை பயன்படுத்துகிறது. இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர் அட்டை சரிபார்த்தல் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

வாக்குச்சாவடி அலுவலர்கள் தற்போது ஒவ்வொரு கிராமங்களிலும் வீடு வீடாக சென்று வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு வீட்டிற்கு வரும் அலுவலரிடம் திருத்தம் ஏதும் செய்ய வேண்டி இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்.