
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான சரத்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் ,
போன வருஷம் டிசம்பர் 13ஆம் தேதி நம் தலைவர் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் இருந்தாங்க. எதுக்கு உண்ணாவிரதம் இருந்தாங்க ? இந்த நாடு வளர்ச்சியான ஒரு நாடு, வளர்ந்து வரும் ஒரு நாடு. இந்த நாட்டுல இளைஞர்களின் சக்தி பெருகி வருகிறது என்பதால் பல நாடுகள் கவனிச்சிட்டு வருது. இளைஞர்களை அடிமைத்தனமாக்கனும், அவர்களுடைய சக்தியை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக மது கொண்டுவந்தாங்க.
பெயரே சொல்ல முடியாத அளவுக்கு போதை பொருள்.அந்த போதையை ஒழிக்கணும்ன்னு சொல்லி, தன்னுடைய உடலை வருத்திக் கொண்டு, காந்திய வழியில் மாபெரும் உண்ணா விரதத்தை சென்னையில் நடத்தினார்கள். நீங்களும் உண்ணாவிரதம் இருங்கன்னு சொன்னார்கள். பல இடத்துல காவல்துறை மறுத்திருக்கிறார்கள். நாம் ஆர்ப்பாட்டம் பண்ணுனோம், போராட்டம் பண்ணுனோம், பண்ணுனோம்… கைதும் செய்யப்பட்டோம். தலைவர் சொன்னாரு, நாம செஞ்சோம்… அதற்கு பிறகு பார்த்தீங்கன்னா…
ஈரோட்டில் பிரம்மாண்டமான பிரமாண்டமான பொதுக்குழு கூட்டம் கூட்டினார்கள். அதில் 24 வகையான தீர்மானம் போடப்பட்டது. அந்த தீர்மானத்தை அடுத்து, மதுரையில் பெரிய பொதுக்கூட்டம் நடத்துனாங்க. அதுக்கு பிறகு சேலத்துல உணவு திருவிழா…. சமத்துவ விருந்து, நீங்க எல்லாம் விருந்துனா எப்படி எடுத்திருப்பீங்க தெரியுமா ?
பல கட்சிகள் விருந்து நடத்தி பார்த்திருப்பீங்க… அந்த விருந்து எப்படி இருக்கும் தெரியுமா ? ஒரு லைன் கட்டி இருப்பாங்க. ஒரு பக்கம் காம்பை வச்சி நிப்பாங்க…. ஒரு பக்கம் அடிப்பான்…. ஒரு தட்டுல சாப்பாடு போடுவாங்க… ஒரு பக்கம் தள்ளி விடுவான்… கேவலமா நடத்துவாங்க… இப்போதும் நடக்குது… அதை மாத்தி அமைக்கணும்ன்னு ஒரு சிந்தனை தலைவருக்கு வந்துச்சு.
அந்த சிந்தனையில் ஒரு மண்டம் எடுத்து, அழகா உட்கார வைத்து….. பிரியாணி என சொல்லுவாங்க…… உணவுகளில் சிறந்தது பிரியாணி… அதை தன விரும்பி சாப்பிடுவாங்க….. அந்த பிரியாணி கூட எப்படி இருக்கனும் தெரியுமா ? 1 கிலோ அரிசிக்கு ஒன்றை கிலோ கறி அதுவும் மட்டன்…. அதுவும் கிடா என சொல்லுவாங்க தெரியுமா ?
ஆண் ஆடு… அந்த கறி தான் போடணும் உத்தரவிட்டாங்க….. அதை நாங்க செஞ்சோம்…. 4,500 பேர், சாப்பிட்டது 5000 பேர் இருப்பாங்க…. அப்போ எவ்வளவு சிந்திக்காரு பாருங்க…. எப்படி சாப்பிட வெச்சாங்கன்னா ? இப்போ கல்யாண வீட்டுக்கு போனால் கூட என்ன செய்வாங்க அப்படின்னா… அடுத்த பந்திக்கு முன்னால பின்னால் ஒரு ஆள் வந்துவிடும். நாம என்ன சாப்பிடணும்ன்னு முடிவு பண்ணுறது அவன் தான்…
அவனே சொல்லிட்டு இருப்பான்… அப்படியெல்லாம் இருக்க கூடாதுன்னு சொல்லி…. 500 பேரை உட்கார வைத்து, வேறு யாரும் வர கூடாது… 500 பேரை உட்கார வச்சு சாப்பாடு கொடுத்தாங்க. அதுக்கு முன்னால அவங்களுக்கு ஒரு செய்தி சொன்னாங்க. உங்க குடும்பத்தை நீங்க கவனமாக .பார்க்கணும். போதைக்கு நீங்க அடிமை ஆகிட கூடாது. இங்க பிள்ளைகளை கவனிக்கணும்ன்னு சொல்லி, உன்னத அறிவை கொடுத்துட்டு தான் அதுக்கு பிறகு உணவு கொடுத்தாங்க என தெரிவித்தார்.