விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் பின்புறம் இருக்கும் ஹோட்டலில் ஒரு தம்பதியினர் பார்சலில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில் பார்சலை பிரித்து பார்த்தபோது பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்ற முறையிட்ட போது அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் கணவன், மனைவி இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது சுகாதாரத்துறையினர் இரவு நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது காலையில் பார்த்துக் கொள்ளலாம் என தட்டி கழித்து விட்டதாக தெரிகிறது. எனவே மாநில அரசு ஹோட்டல்கள் சாலையோர ஹோட்டல்கள் மற்றும் உணவு பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்ட அளவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத் துறையினரும் ஹோட்டல்களில் சுகாதாரமான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.