கர்நாடகத்தில், புதுமணத் தம்பதி ஒன்று தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை காணொலி மூலமாகவே கலந்துகொள்ள நிர்பந்திக்கப்பட்ட விநோதச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குக் காரணம், இண்டிகோ விமானச் சேவையில் ஏற்பட்ட பரவலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தான்.
A newly wed techie couple forced to attend their own reception online after their Indigo flights from Bhubaneswar-Hubbali were cancelled. The bride’s parents having already invited relatives decided to broadcast their live feed on a big screen. #IndigoDelay #FlightCancellations pic.twitter.com/jO7lTgm8lZ
— Deepak Bopanna (@dpkBopanna) December 5, 2025
ஹுப்பள்ளியைச் சேர்ந்த மேதா க்ஷிர்சாகர் மற்றும் ஒடிசா, புவனேஸ்வரில் சேர்ந்த சங்கமா தாஸ் ஆகிய இந்தத் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள், பெங்களூருவில் பணிபுரிகின்றனர். இவர்களின் திருமண வரவேற்பு ஹுப்பள்ளியில் உள்ள குஜராத் பவனில் நடைபெறவிருந்தது. டிசம்பர் 2ஆம் தேதி புவனேஸ்வரில் இருந்து பெங்களூரு வழியாக ஹுப்பள்ளிக்குச் செல்ல இவர்கள் டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.
ஆனால், டிசம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை வரை இவர்களது விமானங்கள் மீண்டும் மீண்டும் தாமதமாகி, இறுதியில் டிசம்பர் 3ஆம் தேதி ரத்து செய்யப்பட்டன. இதனால் வேறு வழியின்றி, புவனேஸ்வரில் தங்கிவிட்ட மணமக்கள், வரவேற்பு உடையுடன், தங்கள் சொந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்துகொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகின்றன.
