அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் சதை உண்ணும் அறிய வகை பாக்டீரியா தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான். ஐந்தாம் வகுப்பு படித்த இந்த சிறுவன் ஆரோக்கியமாக இருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஓடிக்கொண்டிருந்த போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. பின் சில தினங்களில் முழு கால்களிலும் சிறாய்வு போன்ற தடங்களும் ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் சிவப்பு நிற புள்ளிகளும் காணப்பட்டதால் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் சோதனை செய்துள்ளனர். பரிசோதனையில் சிறுவனுக்கு ஸ்ட்ரிப் ஏ தொற்று ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் கணுக்கால் சுருட்டப்பட்டிருந்ததால் அங்கு தொற்று இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க குழந்தை மருத்துவர்கள் குழந்தைகளிடையே தொற்று சமீபத்தில் அதிகரித்துள்ளதாகவும் சிலருக்கு சுவாச தொற்றுக்குப் பிறகுதான் பாக்டீரியா தாக்குகின்றது எனவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொற்று மரணத்தை கூட ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் என்று மருத்துவர்கள் சில அறிவுறுத்தல்களை கூறியுள்ளனர். அதாவது வீக்கம், தோல் சிவத்தல், துர்நாற்றம், காய்ச்சல் ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகள் ஆகும்.