பிரான்சின் ஹெர்மெஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மூன்று புள்ளி ஐந்து லட்சம் ரூபாயை போனஸாக அறிவித்துள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சி கடலில் நீந்தி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல தோல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹெர்மெஸ் தனது ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான போனஸாக 3 லட்சத்து 52 ஆயிரத்து 24 ரூபாயை அறிவித்துள்ளது. இதன் மூலம் 12,400 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டை விட 23 சதவீதம் அதிக லாபம் கிடைத்துள்ளதால் அதிக போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.