இந்தியா போன்ற நாடுகளில் மாப்பிள்ளைக்கு சீர் கொடுத்து பெண்களை திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற சம்பவம் துபாயிலும் நடைபெற்று உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் தனது மகளின் திருமணத்தில் அவரின் எடைக்கு ஏற்ப தங்கத்தை சீர்வரிசையாக கொடுத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரம்மாண்டமான தராசையில் ஒருபுறம் இளம்பெண் அமர்ந்திருக்க அவருக்கு அடுத்துள்ள தட்டில் தங்க கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதனை திருமணத்திற்கு வந்த அனைவரும் திகைத்துப் போய் பார்த்தனர். இதில் சுமார் 70 கிலோ தங்கம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.