உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி இன்றோடு ஓர் ஆண்டை எட்டி உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன் நாட்டு வீரர்கள் முன் உரையாற்றியுள்ளார். இந்த உரையில் அவர் தன் நாட்டு மக்களுக்கும் வீரர்களுக்கும் கூறியதாவது “வேதனையும் துயரமும் மட்டுமின்றி நம்பிக்கையையும் ஒற்றுமையும் கொண்டால் இந்த ஆண்டில் கண்டிப்பாக நாம் வெற்றி பெற முடியும். மேலும் துணிச்சலான உக்ரைனியர் தங்களை நிரூபித்து காட்டி உள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு நம்மில் லட்சக்கணக்கானோர் துணிந்து நின்று போரிட முடிவு செய்துள்ளோம். கடந்தாண்டு நம்மை யாராலும் வெல்ல முடியவில்லை. அதேபோல் இந்த ஆண்டு நாம் வெற்றியின் ஆண்டாக அமைக்க வேண்டும். மேலும் ரஷ்ய கொலைகாரர்கள் தங்கள் செய்த குற்றங்களுக்கு தண்டனை பெற வேண்டும். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்” என நெகிழ்ச்சியும் கண்ணீரமாக அவர் பேசியுள்ளார். இதனை அடுத்து அவர் வீர தீர செயல்களை புரிந்த தங்களுடைய வீரர்களுக்கு விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கியுள்ளார்.