உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி இன்றோடு ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதம் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அதோடு ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு தடைகளையும் விதித்துள்ளன.

இதனை அடுத்து போரில் ராணுவ உதவிகளை வழங்குமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து அனைத்து நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடத்தை எட்டியுள்ளதை குறிப்பிட்டு இமானுவேல் மேக்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதாவது “உக்ரைன் மக்களே உங்களின் ஒற்றுமைக்கும் வெற்றிக்கும் அமைதிக்கும் பிரான்ஸ் உங்கள் பக்கம் எப்போதும் நிற்கும்” என்று அவர் கூறியுள்ளார்.