ஏர் அல்பேனியா என்ற விமான நிறுவனத்தில் 24 வயதான கிரேட்டா என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவர் பணி பெண்ணாக இருந்த விமானம் ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி லண்டன் stansted விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதனையடுத்து விமானம் தரையிறங்க சில நிமிடங்களுக்கு பின்பு கிரேட்டா திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த ஊரியர்கள் அவருக்கு முதலுதவி செய்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கிரேட்டா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்புக்கான காரணம் குறித்து அறிவதற்காக மருத்துவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

இந்த பரிசோதனையில் “கிரேட்டா sads என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். sads என்பது திடீர் இளம் வயது இறப்பு நோய் ஆகும். மேலும் கிரேட்டா இறப்பதற்கு முன்பாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அவர் மயங்கி விழுந்துள்ளார். ஆனால் இந்த மாரடைப்பை எளிதில் சி.பி.ஆர் மூலம் முதலுதவி செய்து காப்பாற்றி விட முடியாது” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோயால் இதுவரை இங்கிலாந்தில் சுமார் 5000 பேர் இறந்துள்ளனர் என ஆய்வறிக்கை ஒன்று கூறுகின்றது. இந்த நிலையில் கிரேட்டாவுடன் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் கூறியதாவது “கிரேட்டா மிகவும் அன்பானவள். எல்லோரிடமும் பாசத்தோடு பழகக் கூடியவள். அவளது இறப்பு வருத்தத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளனர்.